Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Tenkasi | குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு… சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

09:34 AM Nov 01, 2024 IST | Web Editor
Advertisement

கனமழை எதிரொலியாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சமீபத்தில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்குறிப்பிட்ட குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகிய அருவிகளிலும் சுற்றுலா பணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : “முதலமைச்சரின் பாராட்டு அமரனின் பெரும் வெற்றிக்கு அறிகுறி” – நன்றி தெரிவித்த நடிகர் #KamalHaasan!

அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பணிகள் குளிக்க கடந்த 27ம் தேதி அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையே, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் நேற்று இரவு (அக்.31) கனமழை பெய்ததால் ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அருவிகளில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். விடுமுறை தினத்தை கொண்டாட வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Tags :
CourtallamHeavy rainfallnews7 tamilTenkasiTouristswater falls
Advertisement
Next Article