தென்காசி : நாய் குறுக்கே வந்ததால் விபத்து - முதற்கட்ட விசாரணையில் தகவல்!
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே நேற்று இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த சம்பவத்தில் 76க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் போலீசார் விசாரணையில், "நாய் மீது பேருந்தை ஏற்றாமல் இருப்பதற்காக ஓட்டுநர் பேருந்தை வலது புறமாக திருப்பி உள்ளார். அப்போது எதிர் திசையில் பண்பொழியில் இருந்து கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது.
1.வனராஜ் (60) - புளியங்குடி.
2.தேன்மொழி (57) - கடையநல்லூர்.
3.மல்லிகா (56) - புளியங்குடி.
4.கற்பகவல்லி (45) - ஆலங்குளம்.
5.சுப்புலட்சுமி (52) - சொக்கம்பட்டி.
6.முத்துலட்சுமி (35) - சொக்கலிங்கபுரம்.
7. சண்முகத்தாய் (55) - புளியங்குடி.