Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தென்காசி | பட்டப்பகலில் மாட்டை வேட்டையாடிய புலி!

தென்காசி அருகே பட்டப் பகலில் விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாட்டை புலி வேட்டையாடிய சம்பவம் பொது மக்களை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
11:33 AM Jan 15, 2025 IST | Web Editor
featuredImage featuredImage
Advertisement

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மேக்கரை, வடகரை உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுந்து தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில், அடிக்கடி வனவிலங்குகள் ஆடு, மாடுகளையும் வேட்டையாடும் சம்பவங்கள் சமீப காலமாக
தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில், இதுவரை 5-க்கும் மேற்பட்ட மாடுகளை புலி மற்றும் சிறுத்தை வேட்டையாடி உள்ளது.

Advertisement


இந்த நிலையில், தற்போது பட்ட பகலில் மேக்கரை பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாடு ஒன்றினை புலி வேட்டையாடி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் வனத்துறையினர் அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து சமீப காலமாக வனவிலங்குகளால் ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகள் வேட்டையாடப்படும் சம்பவங்களும், விவசாய பயிர்கள் சேதம் அடையும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதுகுறித்து, அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
CowfarmlandTenkasitiger attack
Advertisement