கத்தி மேல் நடந்து அருள் வாக்கு.. கடலூர் அருகே வினோத வழிபாடு!
கடலூர் அருகே உள்ள பதினெட்டாம் படி கருப்பணசாமி கோயிலில் ஆடி அமாவாசையையொட்டி கோயில் பூசாரி கத்தி மேல் நடந்து அருள் வாக்கு கூறும் வினோத பூஜை நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் பில்லாலி அருகே உள்ள ஓட்டேரி பேருந்து நிறுத்தம் பகுதியில்
பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு 1001 பால்குடம் மற்றும் சந்தன குடங்கள் எடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மூலவர் கருப்பண்ணசாமி உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடைபெற்றன. மேலும் சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னர் வினோத வழிபாடாக கோயிலின் பூசாரி கத்தி மேல் நடந்து அருளாசி வழங்கினார். இவ்வாறு செய்வதன் மூலம் உலகெங்கும் அமைதி நிலவும் எனவும் அனைவரது உள்ளங்களில் மகிழ்ச்சி பெருகும் எனவும் நம்பப்படுகிறது. விடிய விடிய நடைபெற்ற இந்த வழிபாட்டு பூஜையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கலந்துக்கொண்ட ஏராளமான பக்தர்கள் காத்திருந்து வினோத பூஜையை கண்டும், மூலவர் கருப்பணசாமியை வழிபட்டும் சென்றனர்.