For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புரோ கபடி லீக் | தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா அணிகள் வெற்றி!

07:09 AM Nov 19, 2024 IST | Web Editor
புரோ கபடி லீக்   தெலுங்கு டைட்டன்ஸ்  யு மும்பா அணிகள் வெற்றி
Advertisement

புரோ கபடி லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் யு மும்பா அணிகள் வெற்றி பெற்றன.

Advertisement

11-வது புரோ கபடி லீக் போட்டி ஹைதராபாத்தில் கடந்த 18ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். லீக்கில் ‘டாப்-2’ இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தன. இதனையடுத்து தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று 2 லீக் போட்டிகள் நடைபெற்றன. அதில், முதல் ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தெலுங்கு டைட்டன்ஸ் அணி 49-27 என்ற புள்ளிக்கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தியது.

இதையும் படியுங்கள் : தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது | மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் நாளை வாக்குப்பதிவு!

தொடர்ந்து இரவு 9 மணிக்கு தொடங்கிய 2வது ஆட்டத்தில் யு மும்பா - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 38-37 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு புல்ஸை வீழ்த்தி யு மும்பா திரில் வெற்றி பெற்றது.

Tags :
Advertisement