Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தெலங்கானாவின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம்: எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்!

04:22 PM Jan 05, 2024 IST | Web Editor
Advertisement

தெலங்கானாவில் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Advertisement

தெலங்கானாவின் 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 30-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.  அத்தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.  தெலங்கானாவில் பெரும்பான்மைக்கு தேவை 61 இடங்கள். இந்நிலையில், தெலங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து தெலங்கானா முதல்வராக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டி பதவியேற்றார்.   தெலங்கானா காங்கிரஸின் மூத்த தலைவர்களான பட்டி விக்ரமார்க்க மல்லு துணை முதலமைச்சராகவும் ,  தெலங்கானா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்  உத்தம் குமார் ரெட்டி உள்ளிட்ட 12 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

இதையும் படியுங்கள்:  விஜய் சேதுபதி மனு !… தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்…!

தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500,  அனைத்து பெண்களுக்கும் அரசு பஸ்களில் இலவச பயணம்,  சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும்,  வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசம்,  விவசாயிகள் மற்றும் குத்தகை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம்,  கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான வித்யா பரோசா கார்டுகள் கல்வி (உதவித்தொகை) வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்து ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் முதற்கட்டமாக தெலங்கானாவில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு அரசு சாதாரண மற்றும் விரைவு பேருந்துகளில் இலவச பேருந்து பயண திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த திட்ட மூலம் சொகுசு பேருந்துகள் தவிர அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான மற்ற அனைத்து பேருந்துகளிலும் பெண்கள், குழந்தைகள் ஆகியோர் இலவசமாக பயணிக்கலாம்.

இந்த நிலையில் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags :
Auto DriversCongressFree Busnews7 tamilNews7 Tamil UpdatesProtestRevanth ReddyTelanganaTelangana Govt
Advertisement
Next Article