Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தொழில்நுட்பக் கோளாறு - வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்!

சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டை வாட்ஸ்அப் மூலம் பெறுவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
11:13 AM Aug 28, 2025 IST | Web Editor
சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டை வாட்ஸ்அப் மூலம் பெறுவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
Advertisement

சென்னை மெட்ரோ ரயிலுக்கான டிக்கெட்டை வாட்ஸ்அப் மூலம் பெறுவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

Advertisement

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வாட்ஸ்அப் ஆன்லைன் டிக்கெட்டுகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வாட்ஸ்அப் சாட்பாட் தற்காலிகமாக வேலை செய்யவில்லை. எனவே, அனைத்து பயணிகளும் சென்னை மெட்ரோ மொபைல் செயலி, பேடிஎம், போன்பே, சிங்கார சென்னை அட்டை மற்றும் சென்னை மெட்ரோ பயண அட்டைகள் போன்ற பிற முறைகள் மூலம் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சிரமத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வருந்துகிறது. மேலும் தகவல் வரும் வரை பயணிகள் கவுண்டரிலும் டிக்கெட்டுகளைப் பெறலாம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Chennaimetro trainproblemTechnical GlitchTicketswhatsapp
Advertisement
Next Article