For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

யோகி பாபு நடித்துள்ள "போட்" படத்தின் டீசர் வெளியானது..!

06:18 PM Dec 16, 2023 IST | Web Editor
யோகி பாபு நடித்துள்ள  போட்  படத்தின் டீசர் வெளியானது
Advertisement

யோகி பாபு நடிப்பில் சிம்புத்தேவன் இயக்கியுள்ள "போட்" படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசரை விஜய் சேதுபதி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் வெளியிட்டனர்.

Advertisement

வடிவேலு அசாத்தியமான நடிப்பில் வெளியான  இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சிம்பு தேவன்.  இதனைத் தொடர்ந்து சிம்புத் தேவன் இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், விஜய்யின் புலி ஆகிய வித்தியாசமான கதைகளை இயக்கிவர்.

இந்த நிலையில் இயக்குநர் சிம்புத் தேவன் நடிகர் யோகி பாபுவை வைத்து  போட் என்கிற புதிய படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் 96 பட புகழ் கௌரி, சின்னி ஜெயந்த், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். முழுக்க முழுக்க கடலில் நடக்கும் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

போட் படத்தின் டீசர் துபையில் இன்று (டிச.16) மாலை 5 மணிக்கு முக்கிய பிரபலங்கள் வெளியிடப்படுவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் நடிகர்கள் ஆமிர்கான், கிச்சா சுதீப், நாக சைதன்யா, பிரித்விராஜ், விஜய் சேதுபதி ஆகியோர் டீசரை வெளியிட்டுள்ளனர்.

Tags :
Advertisement