For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வெளியானது 'லாக் டவுன்' படத்தின் டீசர்!

01:10 PM Jun 09, 2024 IST | Web Editor
வெளியானது  லாக் டவுன்  படத்தின் டீசர்
Advertisement

நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள 'லாக் டவுன்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Advertisement

மலையாளத்தில் வெளியாகி தமிழிலும் நல்ல வரவேற்பு பெற்ற பிரேமம் திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவவில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான தனுஷின் கொடி படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். அண்மையில் இவர் நடித்து வெளியான சைரன் படமும் விமர்சன ரீதியாக நல்லா வரவேற்பு பெற்றது.  தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய சினிமாக்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது 'லாக் டவுன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் ஏஆர் ஜீவா இயக்குகிறார்.  என்ஆர் ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளனர்.  'லாக் டவுன்' திரைப்படம் இந்த மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், லாக் டவுன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.  இந்த படம் லாக்டவுன் காலத்தில் மக்கள் சந்தித்த இன்னல்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.  நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் 'பைசன்' படத்தில் நடித்து வருகிறார்.  இதைத் தொடர்ந்து பிரவீன் கந்த்ரேகுலா இயக்கத்தில் 'பரதா' என்ற படத்தில் நடிக்கிறார்.

Tags :
Advertisement