For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வெளியானது கார்த்தி நடித்துள்ள #Meiyazhagan திரைப்படத்தின் டீசர்!

07:13 PM Sep 07, 2024 IST | Web Editor
வெளியானது கார்த்தி நடித்துள்ள  meiyazhagan திரைப்படத்தின் டீசர்
Advertisement

கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Advertisement

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – த்ரிஷா நடித்து கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘96’. இந்த திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது 6 ஆண்டுகளுக்குப் பின் பிரேம்குமார், நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்கியுள்ளார். மெய்யழகன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் அரவிந்தசாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் போன்றோர் நடித்துள்ளனர். இது கார்த்தியின் 27வது படமாகும்.

படத்தை 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வரும் செப். 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்த நிலையில், தற்போது படத்தின் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், மெய்யழகன் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதன் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

Tags :
Advertisement