Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

Team India hai hum' : டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து பாடலை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்!

09:44 PM Jun 30, 2024 IST | Web Editor
Advertisement

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து ‘TeamIndiahaihum’ என்ற பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.

Advertisement

20 அணிகள் பங்கேற்ற உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடத்தப்பட்டது. அதில், இந்தியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் முன்னேறின. இந்நிலையில், பார்படாசில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது.

இந்த போட்டியில், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 உலக கோப்பையை கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த விராட் கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தொடர் முழுவதும் தனது அதிரடியான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரீத் பும்ராவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த போட்டியுடன்  இந்திய அணியின் மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்நிலையில் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ. 125 கோடி பரிசுத் தொகையை அறிவித்தது பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்நிலையில், டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து ‘#Team india hai hum’ என்ற பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
ChampionCricketFinalsIndiaIndiaVsSouthAfricaINDvSAINDvSA2024INDvsSA2024INDvsSAFinalSouthAfricaT20IWC2024T20IWorldCupT20WorldCupT20WorldCup2024T20WorldCup2024FinalWorldCupFinal
Advertisement
Next Article