Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வரி விதிப்பு மிகவும் குறைவு" - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!

கேரளா, மகாராஷ்டிரா போன்ற மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வரி விதிப்பு மிகவும் குறைவாக உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
12:15 PM Aug 24, 2025 IST | Web Editor
கேரளா, மகாராஷ்டிரா போன்ற மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வரி விதிப்பு மிகவும் குறைவாக உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
Advertisement

கோவை, காந்திபுரம் பகுதியில் செம்மொழி பூங்கா நடைபெறும் பணிகளை பார்வையிட்டு, அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், "செம்மொழி பூங்கா முழுமையாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக, முதலமைச்சரின் அறிவுரையை ஏற்று செம்மொழிப் பூங்கா பார்வையிடப்பட்டதாகவும், ஆணையர் அறிவித்தபடி தொகைக்கு மேல் ரூபாய் 50 கோடி மேல் செலவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

Advertisement

முதல்வரின் அனுமதியை பெற்று அந்த நிதியை கொடுத்து பணிகளை முடிக்கக் கூடிய நடவடிக்கைகளை எடுப்பதற்கான பார்வையிட வந்ததாகவும், ஆர்.எஸ் புரம் மாதிரி பள்ளியில் 2.92 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மாணவர் விடுதி, மற்றும் 1.96 கோடி கட்டப்பட்ட வகுப்பறைகள் திறந்த வைத்து, சர்வதேச அளவில் அமைக்கப்பட்டு வரும் ஹாக்கி மைதானத்தை ஆய்வு செய்து பணிகளைப் பார்வையிட்டு விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதற்காகவும், கவுண்டம்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை விரைந்து முடிக்க ஆய்வு செய்வதாகவும்,

குப்பை மாற்று நிலையத்தினை ஆய்வு மேற்கொண்டு அதேபோன்று உக்கடம் பேருந்து நிலையத்தில் 21.55 கோடி மதிப்பீட்டில் நவீன முறையில் புதுப்பித்தல் பணிகள் துவக்கவும், பாலக்காடு சாலை போத்தனூர் ரயில் நிலையம் அருகில் மாநகராட்சிக்கான குறிச்சி, குனியமுத்தூர் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டப் பணிகளை ஆய்வு செய்ய உள்ளதாகவும், வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 69.20 கோடி மதிப்பீட்டில் இயற்கை எரிவாயு மையம் பணிகள் துவக்குவதற்காக கோவை வந்ததாகவும் கூறினார்.

தொடர்ந்து இந்த பணிகளை மேற்கொண்டு சட்டமன்றத்தில் அறிவித்ததும், தமிழக முதல்வர் நேரடியாக வந்து அறிவித்த பணிகளையும் விரைந்து முடிப்பதற்காக துறையினுடைய அதிகாரிகள் அனைவரும் இங்கு வந்து உள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் மொத்த அதிகாரிகளோடு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வந்ததாக கூறினார்.

வெள்ளலூர் குப்பை கிடங்கில் நிலத்தடி நீர் மாசு அடைவதை தொடர்ந்து பயோமெட்ரிக் முறையில் 69.20 கோடி மதிப்பீட்டில் இயற்கை எரிவாயு மையம் அமைக்கும் பணிகள் இன்று துவக்கி வைப்பதாகவும், அதேபோன்று கோவையில் வேஸ்ட் எனர்ஜி திட்டத்தையும் 250 கோடி மதிப்பில் திட்டத்தையும் துவக்கி வைப்பதாகவும், பிளாஸ்டிக் கழிவுகளில் மின்சாரமாக மாற்றி மக்களுக்கு கொடுக்கின்ற பணிகளை துவங்க உள்ளதாகவும் மீதமுள்ள மக்கும் குப்பைகளை உரமாக்கி திட்டத்தை சென்னையில் துவங்கி உள்ளதாகவும், அடுத்தபடியாக கோவை மதுரையில் துவங்க இருப்பதாக கூறினார்.

கோவை மாவட்டத்தில் வரிவிதிப்பு அதிகமாக உள்ளது என்ற கேள்விக்கு, "சொல்லுங்கள் யாருக்கு அதிகம் ? யாருக்கு அதிகமாக உள்ளது ? யாருக்கு தவறு செய்து உள்ளார்கள் என உரிய முறையில் கூறுங்கள் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சட்டமன்றத்திலே மற்ற மாநிலங்கள் காட்டிலும் கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் காட்டிலும், மகாராஷ்டிராவில் 14,000 வரிகள் விதித்தால் தமிழகத்தில் 2,000 தான் என்றும் சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றி உள்ளதாகவும், ஒவ்வொரு முறையும் வரி விதிப்பு பிரச்சனை வரக் கூடாது என்பதற்காக சட்டம் நிறைவேற்றியதாகவும், 600 சதுர அடிக்கு கீழ் உள்ள இடங்களுக்கு எந்த மாற்றமும் இல்லை என்றும் ஏழைகள் இருக்கும் இடம் என்றவர், 600 சதுர அடிக்கு மேல் உள்ள இடங்களுக்கு வரி விதித்ததாகவும் அதனை முதல்வர் மேலும் வரி விதிக்க வேண்டாம் என்றும் கூறியதாகவும் கூறியவர், குப்பை வரி, சொத்து வரி கூடுதலாக வருவதற்கு வாய்ப்பு கிடையாது என்றார்.

ஏற்கனவே போடப்பட்ட வரி குறைவாக இருக்கும் என்றால் 2,400 சதுர அடியில், 1,200 சதுர அடி கட்டிடம் கட்டினால் மீதமுள்ள இடங்களுக்கு வரி போடாமல் இருக்க முடியுமா ? அதுபோன்று இருக்கும் இடங்களை ட்ரோன் சர்வே மூலம் கண்டறியப்பட்டதாகவும், அதனையும் முதல்வர் ட்ரோன் சர்வே எடுக்க வேண்டாம் என கூறியதாகவும் தெரிவித்தவர், வரியும் எங்கேயும் உயர்த்தப்படவில்லை அப்படி ஏதாவது ? குறிப்பிட்டு கூறினால் திருத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
CMDMKKeralakovaiMinister K N Nehruother statestamil nadutax
Advertisement
Next Article