Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தவெக நடத்தும் 2ம் ஆண்டு கல்வி விருது விழா –  மதிய உணவு பட்டியல் வெளியீடு!

09:58 PM Jun 27, 2024 IST | Web Editor
Advertisement

தமிழக வெற்றி கழகம் சார்பில் நடத்தப்படும் இரண்டாம் ஆண்டு கல்வி விருது விழாவில் வழங்கப்படும் மதிய உணவு பட்டியல் வெளியாகியுள்ளது. 

Advertisement

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை தொடங்கினார். இந்நிலையில், கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் 3 இடங்கள் பிடித்த மாணவ, மாணவிகளை தொகுதி வாரியாக அழைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையும் வழங்கினார். மேலும், கடந்த ஆண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசளித்தார்.

அதைபோல், “தமிழக வெற்றிக் கழகம்” சார்பில் இரண்டாம் ஆண்டு கல்வி விருது விழா,  நாளை (ஜூன் 28) மற்றும் ஜூலை 3 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சென்னையில் நடைபெற உள்ளதாக தவெக சார்பில் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்டமாக அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நாளை நடைபெறுகிறது.

இதில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை அழைத்து ஊக்கத்தொகை மற்றும் வெற்றி சான்றிதழ் வழங்கி கௌரவிக்க உள்ளார்.  இந்த விழாவில் பங்கேற்கும் மாணவ மாணவியருக்கான பெற்றோர்கள் புகைப்படம் அடங்கிய பாஸ் விநியோகம் சமீபத்தில் வழங்கப்பட்டது.

இந்த நிலையில்,  நாளை நடைபெறும் கல்வி விருது வழங்கும் விழா  மதிய உணவு பட்டியல் வெளியாகியுள்ளது.   அதன்படி, கல்வி விருது வழங்கும் விழாவில் கலந்துக் கொள்பவர்களுக்கு சாதம்,  வடை,  அப்பளம்,  அவியல்,  மோர்,  வெற்றிலை பாயாசம்,  இஞ்சி,  துவையல்,  தயிர் பச்சடி,  அவரை மணிலா பொரியல்,  உருளை காரக்கறி,  ஆனியன் மணிலா,   வத்தக்குழம்பு,  கதம்ப சாம்பார்,  தக்காளி ரசம் ஆகியவை வழங்கப்படுகிறது.

Tags :
தமிழக வெற்றிக் கழகம்தவெகboard examsBussy AnandHSCResultssslctvkTVK Vijayvijay
Advertisement
Next Article