Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மீண்டும் வருகிறது டாடா-வின் நானோ கார்!

05:15 PM Nov 10, 2024 IST | Web Editor
Advertisement

ரத்தன் டாடாவின் கனவு காரான நானோ காரின் புதிய அப்டேட்டட் மாடலை நானோ நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

Advertisement

ரத்தன் டாடாவின் கனவை புதுப்பிக்கும் வகையில் டாடா நிறுவனம், 300 கிமீ மைலேஜ் தரும் நானோ காரின் புதிய எலக்ட்ரிக் வெர்சன் அப்டேட்டட் மாடலை அறிமுகப்படுத்தவுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு எளிய மக்களும் பயன் அடையும் வகையில் பைக் விலைக்கே காரை வழங்க வேண்டும் என்ற தனித்துவமான நோக்கத்தோடு அறிமுகப்படுத்தப்பட்ட கார் தான் நானோ. இது டாடா குழும் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவின் கனவு கார் ஆகும். நடுத்தர மக்களிடம் பலத்த வரவேற்பை பெற்ற இந்தக் கார், புதிய வடிவமைப்பில் மீண்டும் சந்தையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

2025-ம் ஆண்டு இந்த கார் சந்தைக்கு அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. அப்டேட் வெர்ஷனில் வெளிப்புற மறுவடிவமைப்பு அட்டகாசமாக மாற்றப்பட்டுள்ளது. நெரிசலான நகர வீதிகள் மற்றும் நெரிசலான வாகன நிறுத்துமிடங்களில் சூழலை கருத்தில் கொண்டும், நவீனமயமாக்கப்பட்ட ஹெட்லைட் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இருக்கைகள், மேம்படுத்தப்பட்ட லெக் ரூம், நான்கு பெரியவர்கள் வசதியாக செல்லக்கூடிய வகையில் இருக்கைகள் என அனைத்திலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த காரில் airbags and an Anti-lock Braking System உள்ளது. 17 கிலோவாட் எலக்ட்ரிக் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கி.மீ செல்ல முடியும். 60 முதல் 70 கி.மீ வேகத்தில் செல்லலாம். 10 விநாடியில் 60 கி.மீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது. ஆரம்ப விலை ரூ.4 முதல் 6 லட்சம் வரை இருக்கலாம். இது தற்போதைய சந்தையில் மலிவான விலைதான். கார் சந்தையில் மற்ற போட்டியாளர்களை ஒப்பிடும் போது இது மிகவும் குறைவான விலை என்றே சொல்லலாம்.

Tags :
EVNew ModelNews7TamilRatan TataTATATata NanoVersion 2
Advertisement
Next Article