ஓசூரில் டாடா நிறுவனம் - கூடுதலாக ரூ.7000 கோடி முதலீடு!
ஐ - போன் உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலை விரிவாக்கம் செய்வதற்காக ஓசூரில் டாடா நிறுவனம் கூடுதலாக ரூ.7000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓசூரில் உள்ள டாடா எலெக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆலை கூடுதலாக 7000 கோடி ருபாய் முதலீட்டில் ஐ-போன் உதரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை நாளை சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாடில் வெளியிடப்டும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : ராணுவ பயிற்சி மேற்கொண்டு வரும் BTS ஜிமின், ஜங்கூக்: புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!
டாடா எலெக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆலையின் விரிவாக்கத்தால் 6 ஆண்டுகளில் 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ-போன் இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான முதல் இந்திய நிறுவனமாக கடந்த நவம்பர் மாதம் டாடா எலக்ட்ரானிக் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.