Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“குடிப்பவர்கள் இல்லையெனில் டாஸ்மாக் கடைகள் தானாக மூடப்பட்டுவிடும்” - #VCK மாநாட்டில் ஆர்.எஸ்.பாரதி பேச்சு!

09:59 PM Oct 02, 2024 IST | Web Editor
Advertisement

“குடிப்பவர்கள் இல்லையெனில் டாஸ்மாக் கடைகள் தானாக மூடிவிடும்” என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாட்டில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும், தேசிய மது விலக்கு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இம்மாநாட்டில் விசிக கொடியை திருமாவளவன் எம்பி ஏற்றி வைத்து தீர்மானங்களை வாசித்தார்.

இந்த மாநாட்டில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், சிபிஎம் கட்சியிலிருந்து வாசுகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மகளிர் பிரிவு தலைவர் ஃபாத்திமா முஸப்பர், காங்கிரஸ் கட்சியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, பாலபிரஜாபதி அடிகளார் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது;

நமது அரசியல் எதிரிகள் அனைவரும் வயிற்றெரிச்சலோடு இருக்கிறார்கள். அவர்கள் வயிற்றெரிச்சல் படபட இந்த கூட்டணி ஒற்றுமையாக இருக்கும். அதனை நிரூபிக்கும் வகையில், அனைவரையும் ஒன்றுக்கூட்டி, திருமாவளவன் ஒரு மகத்தான மாநாட்டை கூட்டியிருக்கிறார். மாநாட்டிற்கு மற்ற கட்சிகளின் சார்பில் மகளிர் வந்தனர். ஆனால் திமுக சார்பில் இரண்டு ஆண்கள் வந்துள்ளோம். நானும், டிகேஎஸ் இளங்கோவனும். இது எதைக்காட்டுகிறது என்றால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், திருமாவளவனுக்கும் இருக்கும் நெருக்கத்தையும், தொடர்பையும் யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்பதை காட்டுகிறது.

இங்கு பேசிய அனைத்து தலைவர்களும் மதுவினால் ஏற்படும் கொடுமைகளை குறித்து பேசினர். இதில் கருத்து வேறுபாடு இல்லை. “மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அது பிரசாரத்தில் வெற்றிப்பெற வேண்டும் என சொன்னால், மக்கள் மத்தியில் எழுச்சி உண்டாக வேண்டும்” என 1971-ல் மதுவிலக்கை தள்ளிவைக்கும் போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூறினார். அன்றைய கட்சியின் பொருளாளார் எம்ஜிஆர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து, அந்த குழு நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யும்” என கூறினார்.

அந்த முடிவினை திருமாவளவன் இன்று கையில் எடுத்துள்ளார். இங்கு வந்திருக்கும் ஒவ்வொரு மகளிரும், இளைஞரும் திருமாவளவன் முன்னிலையில் ஒரு உறுதிமொழியை ஏற்கவேண்டும். ஒவ்வொருவரும் தலா 10 பேரை குடிப்பதிலிருந்து மனமாற்றம் செய்வோம் என்ற உறுதிமொழியை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் டாஸ்மாக் கடைகள் மூடபடவேண்டிய அவசியம் இல்லை . கடைகள் தானாக மூடப்பட்டுவிடும். குடும்ப கட்டுப்பாடு என்றால் பாவம் என ஒருகாலத்தில் தமிழ்நாட்டில் கருதப்பட்டது.

அரசியல் மாநாட்டை நடத்தி விடலாம். ஆனால் மதுஒழிப்பு மாநாடு என்பதை நடத்த, அதுவும் பெண்களை வைத்து நடத்த துணிச்சல் வேண்டும். அத்தகைய துணிச்சலோடு மாநாட்டை ஏற்பாடு செய்த திருமாவளவனை திமுக சார்பில் பாராட்டுகிறேன்” என ஆர்எஸ் பாராதி பேசினார்.

Tags :
Anti Drug ConferenceDMKrs bharathithirumavalavanVCK
Advertisement
Next Article