டாஸ்மாக் வழக்கு - உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு!
டாஸ்மாக் விவகாரம் தொடர்பான வழக்கில் மாநில உயர் நீதிமன்றமே முடிவு செய்யட்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்று வழக்கை திரும்ப பெற்று கொள்வதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மாற்றக்கோரி தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்த மனுக்கள், தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,
தலைமை நீதிபதி;
இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் முடிவு செய்யட்டும். அதன் பின்னர் அதன் முடிவு அடிப்படையில் விசாரிக்கலாம்.
தமிழக அரசு:
வழக்கை திரும்ப பெறுகிறோம்.
நீதிபதிகள்:-
இந்த விவகாரத்தில் மனுவை திரும்ப பெற வேண்டும் என்ற தமிழக அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கை திரும்ப பெற அனுமதிக்கிறோம்.