For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"விண்வெளி துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 வேலைவாய்ப்புகள்" - தமிழ்நாடு விண்வெளி தொழிற்கொள்கை வெளியீடு!

10:42 AM Jul 01, 2024 IST | Web Editor
 விண்வெளி துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 10 000 வேலைவாய்ப்புகள்    தமிழ்நாடு விண்வெளி தொழிற்கொள்கை வெளியீடு
Advertisement

விண்வெளி துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் கூடிய தமிழ்நாடு விண்வெளி தொழிற்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. 

Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கியது. முதல்நாள் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இரங்கல் தீர்மானத்துடன் அவை முடிந்தது. பின்னர் 21, 22 மற்றும் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை 9 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத் தொடரில் தொழில் மற்று முதலீட்டு துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

சென்னையில் இன்று இரவு சர்வதேச விண்வெளி மையத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்! - News7 Tamil

அப்போது, வானூர்தி மற்றும் பாதுகாப்புத் துறையில் பெரும் முதலீடுகளை ஈர்த்து வருவதன் தொடர்ச்சியாக மேலும் இத்துறை சார்ந்த பன்னாட்டு நிறுவனங்களை ஈர்த்து அதிகளவிலான முதலீடுகளை பெறும் நோக்கில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை (Space Tech Policy) வெளியிடப்படும். மேலும், தமிழ்நாட்டை விண்வெளி தொழிலில் முன்னணி மாநிலமாக மேம்படுத்தவும், அதிகளவிலான முதலீடுகளை ஈர்க்கவும் விண்வெளி தொழில் கொள்கை (Space Tech Policy) வெளியிடப்படும் என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : கைகளை கட்டிக்கொண்டு 28 மீட்டரை 1:59 நிமிடத்தில் நீந்திய 5வயது சிறுவன் – உலக சாதனை படைத்து அசத்தல்!

இந்நிலையில், தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை வெளியிடப்படும் என தொழிற் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சட்ட பேரைவயில் அறிவித்த நிலையில் தற்போது அதற்கான வரைவு அறிக்கை (Space Tech Policy) வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :

  • "விண்வெளி துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயம்.
  • புதிய மற்றும் விரிவாக்க தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க திட்டம்.
  • மதுரை, துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்கள் (Space bay) விண்வெளி தொழில் விரிவாக்க மாவட்டங்களாக அறிவிப்பு"

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement