For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தாராபுரம் புனித ஞானப்பிரகாசியார் ஆலய  தேர் திருவிழா கோலாகலம் - ஏராளமானோர் பங்கேற்பு!

07:27 AM Jul 22, 2024 IST | Web Editor
தாராபுரம் புனித ஞானப்பிரகாசியார் ஆலய  தேர் திருவிழா கோலாகலம்   ஏராளமானோர் பங்கேற்பு
Advertisement

தாராபுரம் புனித ஞானப்பிரகாசியார் ஆலயத்தில் நேற்று தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

Advertisement

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் புனித ஞானப்பிரகாசியார் ஆலயம் உள்ளது.  பழமையும், பெருமையும் வாய்ந்த புனித ஞானப்பிரகாசியார் ஆலய 171 ஆம் ஆண்டு தேர்த்திருவிழா கோவை மறை மாவட்ட சொத்துக்களின் கண்காணிப்பாளர் ஆண்டனி செல்வராஜ் தலைமையில் கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடந்த 19ஆம் தேதி மாலை 6 மணியளவில் ஆலயத்தைச் சுற்றி பவனியும், தொடர்ந்து 20ம் தேர் பவனியும் நடைபெற்றது.  இதனையடுத்து நேற்று கூட்டுப்பாடல் திருப்பலியுடன் துவங்கியது. சிறப்பு நிகழ்வாக சிறுவர் சிறுமியர்களுக்கு முதல் நன்மை வழங்கப்பட்டு, திருப்பலி முடிந்ததும் வேண்டுதல் நடைபெற்றது.


பின்னர் நேற்று இரவு 8, மணியளவில் தேர் பவனி நடைபெற்றது.  இந்த தேர் திருவிழா அலோசியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து தாலுகா சாலை, சர்ச் ரோடு, அண்ணா சிலை, பெரிய கடை வீதி வழியாக மீண்டும் புனித ஞானப்பிரகாசியார் ஆலயத்தை வந்தடைந்தது.

இதில் 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு .  வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரை வடம் பிடித்து இழுத்தனர்.  இந்த தேர் பேண்ட் வாத்தியங்கள் முழங்க கோலாகலமாக நடைபெற்றது.  இறுதியாக இரவு 10 மணியளவில் மீண்டும் தேர் ஆலயத்தை வந்தடைந்தது.

Tags :
Advertisement