தஞ்சை மாதாக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பு!
தஞ்சாவூர் அருகே மாதாகோட்டையில் ஜல்லிக்கட்டு விழா இன்று (பிப்.6) கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர் மாதாக்கோட்டையில் லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவையின் சார்பில் இன்று (பிப். 06) ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியினை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார். போட்டியின் ஆரம்பத்தில், மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். தொடர்ந்து, வாடிவாசலில் இருந்து மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் 600 காளைகள் மற்றும் 350 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் காளைகளுக்கு சைக்கிள், கட்டில், குடம் குவளை உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. போட்டியில் தஞ்சை புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து மாடுபிடி வீரர்களும் மற்றும் காளைகளும் கலந்து கொண்டன.