For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

TANCET, CEETA தேர்வு எழுதுபவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தகவல் மையத்தை கேட்டு தெரிந்து கொள்ளலாம் - அண்ணா பல்கலைக்கழகம்!

08:33 PM Mar 07, 2024 IST | Web Editor
tancet  ceeta தேர்வு எழுதுபவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தகவல் மையத்தை கேட்டு தெரிந்து கொள்ளலாம்   அண்ணா பல்கலைக்கழகம்
Advertisement

TANCET, CEETA நுழைவுத் தேர்வு எழுதுபவர்கள் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நாளை அண்ணா பல்கலைகழகத்தில் செயல்படும் தகவல் மையத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. 

Advertisement

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் டான்செட்  எம்சிஏ , எம்பிஏ மற்றும் CEETA PG 2024 தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு TANCET , CEETA PG 2024 தேர்வுகளை மொத்தம் 39,301 தேர்வர்கள், 40 தேர்வு மையங்களில் 14 நகரங்களில் தேர்வு எழுத உள்ளனர்.

குறிப்பாக TANCET - MCA தேர்வு வரும் மார்ச் 9 ஆம் தேதி காலை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு 9206 பேர் பதிவு செய்துள்ளனர். TANCET - MBA தேர்வு மார்ச் 9 ஆம் தேதி மதியம் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு 24,814 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். M.E/ M.TECH./ M.Arch/ M . Plan படிப்புகளுக்கு நடத்தப்படும் CEETA - PG-24 தேர்வு மார்ச் 10ஆம் தேதி காலை நடைபெற உள்ளது. இதற்கு 5,281 பேர் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தேர்வு எழுதுபவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் நாளை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் செயல்படும் Enquiry Office இல் அதனை தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement