Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கேரளாவில் தமிழ்ராக்கர்ஸ் அட்மின் கைது - ராயன் படத்தை ரகசியமாக பதிவு செய்தபோது போலீசார் மடக்கி பிடித்தனர்!

09:13 AM Jul 28, 2024 IST | Web Editor
Advertisement

தனுஷ் நடித்த ‘ராயன்’ படத்தை திரையரங்கில் வைத்து ரகசியமாக பதிவு செய்த தமிழ்ராக்கர்ஸ் அட்மினை கேரள போலீசார் கைது செய்தனர்.

Advertisement

திரையரங்குகளில் வெளியாகும் படங்களை அடுத்த சிலமணிநேரங்களிலேயே சிலர் சட்டவிரோதமான வெளியிட்டு வந்தனர். இதில் முதன்மையானதாக செயல்பட்டு வந்தது தமிழ்ராக்கர்ஸ் எனும் இணையதளமாகும். இந்த தளத்திற்கு எதிராக திரைத்துறையினர் பலர் புகார் அளித்துள்ளனர். ஆனால் புதிய புதிய வழிகளில் இந்த தளம் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தனுஷின் ராயன் திரைப்படத்தை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஏரியஸ் தியேட்டரில் ஒருநபர் செல்போனில் பதிவு செய்து கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து பிரபல மலையாள நடிகரும் , இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான ப்ரித்விராஜின் மனைவி சுப்ரியா காவல்துறையினரிடம் புகார் தெர்வித்தார்.

இதனைத் தொடர்ந்து கொச்சி சைபர் கிரம் போலீஸ் விரைந்து வந்து திரையரங்கில் இருந்த ஜெப் ஸ்டீபன்ராஜை கைது செய்தனர். இவர் புதிய திரைப்படங்களை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடும் தமிழ் ராக்கர்ஸை சேர்ந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ஏரியஸ் தியேட்டரில் படத்தை பதிவு செய்து கொண்டிருந்த போது மதுரையை சேர்ந்த ஜெப் ஸ்டீபன்ராஜ் கைது செய்யப்பட்டார். இது குறித்து சைபர் போலீசார் நடத்திய விசாரணையில் 12 பேர் இணைந்து செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழ் ராக்கர்ஸ் தளம் மட்டுமின்றி டெலிகிராம் செயலியிலும் ஸ்டீபன் ராஜ் படங்களை வெளியிட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட ஸ்டீபன் ராஜை போலீசார் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
AdminArrestRayanRayan MovieTamil Rockers
Advertisement
Next Article