#TamilNaduInvestmentConclave2024 |அடிக்கல் நாட்டப்பட்ட புதிய திட்டங்கள் என்னென்ன?
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ல் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டப் பணிகள்
குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (21.08.2024) ‘தமிழ்நாடு முதலீட்டு மாநாடு- 2024’ நடைபெற்று வருகிறது. முதலீட்டாளர்கள் மாநாட்டில் முடிவுற்ற 19 புதிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ. 51,157 கோடி மதிப்பிலான 28 தொழில் திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்வில், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ல் முஅடிக்கல் நாட்டப்பட்ட திட்டப் பணிகள்
குறித்த தகவல்களின் முழு விவரம் வருமாறு:
நிறுவனம் முதலீடு வேலைவாய்ப்பு
1. Sembcorp ரூ. 36,238 கோடி 1,511
2. Ramatex ரூ.1,160 கோடி 5,000
3. Ascendas Firstspace ரூ.1,000 கோடி 1,000
4. ESR Phase ரூ.800 கோடி 15,000
5. Maple Tree ரூ.500 கோடி 25
6. Saint Gobain ரூ.3,400 கோடி 1,140
7. CHENNSTAR ரூ.260 கோடி 90
8. Hyundai Motor ரூ.180 கோடி 50
9. Mitsuba Corporation ரூ.155 கோடி 75
10. SATRAC ரூ.114 கோடி 605
11. Pragati Warehousing ரூ.1,500 கோடி 2,500
12. Capgemini ரூ.1,000 கோடி 5,000
13. BIADS ரூ.650 கோடி 414
14. Ceebros ரூ.600 கோடி 800
15. Greenbase ரூ.500 கோடி 1,000
16. Bonfiglioli ரூ.400 கோடி 250
17. Polyhose ரூ.400 கோடி 250
18. KRR Air ரூ.400 கோடி 250
19. Baettr India ரூ.325 கோடி 300
20. Maiva Pharma ரூ.300 கோடி 1,000
21. Schwing Stetter ரூ.300 கோடி 250
22. Softgel ரூ.230 கோடி 850
23. G-Care Council ரூ.225 கோடி 3,300
24. Tablets India ரூ.200 கோடி 500
25. ARaymond Fastener ரூ.100 கோடி 250
26. Basant Betons ரூ.100 கோடி 75
27. Tata Communications ரூ.70 கோடி 150
28. Hical Technologies ரூ.50 கோடி 200