For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

07:59 AM Nov 21, 2024 IST | Web Editor
அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
Advertisement

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.  திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

நேற்று ஒன்றிரண்டு இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக ராமநாதபுரத்தில் முகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. பாம்பனில் அதிகபட்சமாக 28 செ.மீட்டர் மழை பெய்தது.இன்று காலை வரை சில இடங்களில் மழை தொடர்ந்தது.

இதையும் படியுங்கள் : டொமினிகா நாட்டின் உயரிய விருதைப் பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி!

இந்த நிலையில் காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement