கேரள ரயில் விபத்து… தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் #MKStalin அறிவிப்பு!
கேரள ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
கேரள மாநிலம் பாரதப்புழா ஆற்றின் மேல் உள்ள பாலத்தில் ரயில்வே தடங்களைச் சுத்தம் செய்து கொண்டிருந்த போது தண்டவாளத்தின் வழியே வந்த கேரள எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், தமிழர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். சேலம் பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த விபத்தில், லட்சுமணன், ராணி, வள்ளி ஆகியோர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, அவர்களது சொந்த ஊரான சேலம் மாவட்டம் அடிமலைப்புதூர் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. மீட்கப்பட்டவர்களது சடலங்கள் அங்கேயே உடற்கூராய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.ய
இதையும் படியுங்கள் : கன்னட இயக்குநர் #Guruprasad திடீர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்!
கேரள மாநிலம் ஷோரனூர் அருகே ரயில் பாதையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ரயில் மோதியதில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.