For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மினி பஸ்களுக்கு அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு முடிவு!

10:15 AM Jun 18, 2024 IST | Web Editor
மினி பஸ்களுக்கு அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு முடிவு
Advertisement

தமிழ்நாட்டில் மினி பஸ்களை இயக்க மீண்டும் அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான ஒருங்கிணைந்த மினி பஸ் திட்ட வரைவு அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

Advertisement

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மினி பஸ்களுக்கான அனுமதி வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.  இதன்படி, ஒருங்கிணைந்த மின் பஸ் திட்ட வரைவு அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த வரைவு திட்ட அறிக்கையின் படி தமிழகம் முழுவதும் மினி பஸ்களை இயங்குவதற்கான அனுமதி வழங்கப்படவுள்ளது.

சென்னையை பொறுத்த வரை தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் ஆகிய பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழித்தடம் வழங்கப்படாது. அதே நேரத்தில் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோளிங்கநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்படும் என தெரிகிறது.

தமிழகம் முழுவதும் எந்தெந்த வழித்தடத்தில் மினி பஸ் சேவைகளுக்கு அனுமதி வழங்குவது மற்றும் எவ்வளவு பேருந்துகளுக்கு அனுமதி வழங்குவது என்பதை ஆர்டிஓக்கள் முடிவு செய்வார்கள். அதிகபட்சமாக 25 கிலோ மீட்டர் தூரம் வரை மினி பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்படும். இதில் 18 கிமீ சேவை இல்லாத வழித்தடத்திலும் எட்டு கிலோமீட்டர் சேவை உள்ள வழித்தடத்திலும் அனுமதி வழங்கப்படும்.

ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இல்லாமல் ஒரு மினி பேருந்தில் அதிகபட்சமாக 25 பேர் பயணம் செய்யும் வகையில் இருக்கை வசதி இருக்கலாம். அனைத்து மினி பஸ்களிலும் ஜிபிஎஸ் வசதி பொருத்தப்பட வேண்டும். இந்த வரைவு அறிக்கை தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துக்களை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம். இதன்படி ஜூலை 14-ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

மேலும் இது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் ஜூலை 22-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெறும்”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement