For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… தூத்துக்குடியில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்!

09:07 PM Dec 18, 2023 IST | Web Editor
தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… தூத்துக்குடியில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்
Advertisement

தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், முதியோர்கள், குழந்தைகள் உட்பட வெள்ளத்தில் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்டெடுக்கவும் கோரிக்கை வந்துள்ளது. அவர்கள் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Advertisement

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.  இதனால் திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பலத்த மழையின் காரணமாக கோவில்பட்டி நகரில் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. ரயில்வே சுரங்க பாலங்கள் மழைநீர் தேங்கி உள்ளது. கோவில்பட்டியில் உள்ள ‌இளையரசனேந்தல் மழை நீர் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுவதால்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத வகையில் மழை பெய்து உள்ளதால் கோவில்பட்டி நகரமே வெள்ளக்கடாக காட்சி அளிக்கும் நிலை உள்ளது.

இந்நிலையில் 3 முதியோர்கள் மற்றும் ஒரு குழந்தை உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில், கீழ்கண்ட முகவரியில் சிக்கித்தவிப்பதாகவும், அவர்களை மீட்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்பு கொள்ளமுடியாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி : 2H/145, கதிர்வேல் நகர், 1வது குறுக்குத்தெரு, தூத்துக்குடி - 628 008.

இதேபோல், தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு அருகே சவேரியார் புரம், கணேஷ் நகர் 2வது தெருவில் கடுமையாக வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் 100க்கும் மேற்பட்டோர்கள் தவிர்த்து வருவதாகவும், இரண்டு நாட்கள் மின்சாரம் இல்லாமல் பெரும் துன்பப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட முதியோர்கள் அப்பகுதியில் இருப்பதாகவும், அவர்களை மீட்டு செல்ல அப்பகுதிக்கு மீட்பு குழுவினர் வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்புக்கு: +919894133590

இதேபோல், மனத்தி கிராமம், திருச்செந்தூர் தாலுகாவில் மொத்தம் 75 குடும்பங்கள் இருப்பதாகவும், சுமார் 250 நபர்கள் அங்கு சிக்கித்தவிப்பதாகவும், அந்த இடம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களோடு, அவர்களை மீட்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு: 7708926441

Tags :
Advertisement