#GoldRate | மீண்டும் எகிறிய தங்கம் விலை…4 நாட்களில் சவரனுக்கு ரூ.1,480 அதிகரிப்பு!
சென்னையில் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.7,280க்கும், சவரன் ரூ.58,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த ஜுலை மாதம் மத்திய அரசு, பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைத்தது. இதன் காரணமாக, அன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது. பின்னர், மீண்டும் தங்கம் விலை குறைய தொடங்கியது. ஆனால், இந்த விலை குறைவு நீடிக்கவில்லை.
இதையடுத்து, கடந்த 16-ம் தேதி (செப்.16) ஒரு சவரன் தங்கம் ரூ.55,000 தாண்டி விற்பனையானது. பின்னர், தங்கம் விலை படிப்படியாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. அக்.16 அன்று ஆபரணத் தங்கம் விலை மற்றொரு புதிய உச்சத்தை எட்டியது. அன்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ.57,120 என்ற நிலையில் விற்பனையானது.
இதையும் படியுங்கள் : “சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது; வரிகளை நீக்கினால் ‘திராவிடம்’ வீழாது” – துணை முதலமைச்சர் #UdayanidhiStalin கண்டனம்!
இந்நிலையில் , நேற்று தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ரூ.7,240-க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.57,920க்கும் விற்பனையானது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,280-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,240-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 58 ஆயிரம் ரூபாயை கடப்பது இதுவே முதல்முறையாகும்.கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ. 1,480 அதிகரித்துள்ளது.
வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.2 அதிகரித்து ரூ.107க்கு விற்பனையாகி வருகிறது.கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.