Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் கடந்த ஒரு ஆண்டில் அதிக உருமாற்றம் அடைந்துள்ளது - பொது சுகாதாரதைத்துறை தகவல்...!

09:55 AM Feb 08, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வகை கொரோனா கடந்த ஒரு ஆண்டில் அதிக உருமாற்றம் அடைந்துள்ளதாக பொது சுகாதாரதைத்துறை அறிவித்துள்ளது.

Advertisement

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.  இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள்.  அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள்,  மாஸ்க்,  தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது. இதனிடையே, புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில், கொரோனா தொற்றுக்கும் இந்த உருமாறிய வைரஸ் தொற்றான ஜேஎன் 1 வைரஸே காரணம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் ; உதகை மண்சரிவில் 7 பேர் உயிரிழப்பு – கட்டிட உரிமையாளர் உட்பட 4 பேர் கைது…!

இதையடுத்து, ஒமைக்ரான் பிஎஃப் 7 தொற்று கொரோனாவின் மற்ற திரிபுகளைக் காட்டிலும் அதிக வீரியம் கொண்டதுடன் அதிவேகத்தில் பரவக் கூடியது. அதாவது இந்த வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் மூலம் பத்து முதல் 19 பேருக்கு பரவும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதற்கு முந்தைய கொரோனா திரிபுகளால் ஒருவர் மூலம் அதிகபட்சமாக 6 பேருக்கு மட்டுமே பரவும் நிலை இருந்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வகை கொரோனா கடந்த ஒரு ஆண்டில் அதிக உருவமாற்றம் அடைந்துள்ளது.  தமிழ்நாட்டில் ஒமிக்ரான் மாறுபாடு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பல்வேறு வகையான உருவங்களை மாற்றி அமைத்துக் கொண்டே வருகிறது.  மேலும், இதுவரை ஒரு லேசான தொற்றுநோயை மட்டுமே உருவாக்கி வந்த நிலையில் தற்போது ஒரு கடுமையான வகைகளையும் மாற்றியது.  இதனால்,  வயது முதியோர், குழந்தைகள் ஆகியோர் பாதுக்கப்பாக இருக்கு வேண்டும். இவர்களை பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

இந்த வகை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல்,  இருமல்,  தொண்டை வலி, சளி,  சோர்வு போன்ற அறிகுறிகளும் பாதிப்புகளும் ஏற்படும்.  குறைவான எண்ணிக்கையில் சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம்.  ஏதேனும் அறிகுறி இருந்தால் அருகில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனையின் சிகிச்சை மேற்கோள்ள வேண்டும் என பொது சுகாதாரதைத்துறை அறிவித்துள்ளது.

Tags :
CasesCoronaCoronaviruscovidCovidJN1IncreaseOmicronTamilNadu
Advertisement
Next Article