மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தென்மாவட்டங்களில் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
வியட்நாமைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் மின்சார வாகனம் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலையை அமைக்கும் பணிக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். இதன்பின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சூசைபாண்டியாபுரத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
இதையும் படியுங்கள் : தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை - கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக அழைப்பு!
முன்னதாக வெள்ள பாதிப்பு தொடர்பான புகைப்படங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது, ஆட்சியர் லெட்சுமிபதி வெள்ள பாதிப்பு குறித்த விவரங்களை முதலமைச்சரிடம் தெரிவித்தார். பின்னர் நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.
தொடர்ந்து தென்மாவட்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் அதிகனமழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், வீடுகளை இழந்த மக்கள், படகுகளை இழந்த மீனவர்கள், உயிர்களை இழந்த உறவுகள் என 15,000 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.