"கடந்த 29 நாட்களில் 189 உடல் உறுப்புகள் தானம்" - தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் அறிவிப்பு.!
தமிழ்நாட்டில் கடந்த 29 நாட்களில் உடல் உறுப்பு தானம் செய்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் தெரிவித்துள்ளனர்.
விபத்து, புற்றுநோய், பிறவி குறைபாடு மற்றும் தீக்காயம் உள்ளிட்டவையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அறுவை சிகிச்சையின் மூலம் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்படுகிறது. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு மாற்று உறுப்புகள் தேவைப்படுவதன் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதையும் படியுங்கள் ; ஹாங்காங் – சென்னை இடையே நேரடி விமான சேவை – 4ஆண்டுகளுக்கு பின் தொடக்கம்.!
பொதுமக்களிடையே சாலை பாதுகாப்புகள் மற்றும் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வுகள் இல்லாத காரணத்தால், நாள்தோறும் ஏராளமான விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் பெரிய அளவிலான ஆபத்துக்களும், சில சமையங்களில் மூளைச்சாவு ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. இதையடுத்து, விபத்துகளில் மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் உடல் உறுப்புகள் யாருக்கும் பலனில்லாமல் வீணாகிறது. உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு இல்லாததும் இதற்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
இந்நிலையில், 2024 ஜனவரி 1 முதல் 29 ஆம் தேதி வரையிலான கணகெடுப்பில், தமிழ்நாட்டில் இதுவரை 30 பேர் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தற்போதைய நிலவரப்படி, சிறுநீரகம் 48பேர், கல்லீரல் 438பேர், இதயம் 10பேர், நுரையீரல் 13 பேர், எலூம்புகள் 17 பேர், தோள் 10 பேர் என தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளதாக தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது. இந்த உடல் உறுப்புகளால் பலர் பயன் அடைந்துள்ளனர்.