மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,080 குறைந்து ரூ. 56,680 விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. அந்த வகையில், கடந்த மாதம் 30ம் தேதி ஒரு சவரன் ரூ.59,000 கடந்து புதிய உச்சம் பெற்றது.
சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ. 58,760 க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,220-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.56, 680 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ. 7085 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் கடந்த 12 நாட்களில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.2,960 குறைந்தது பொதுமக்கள் மத்தியில் சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 102 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் கிராமுக்கு இரண்டு ரூபாய் குறைந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.