For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Tamilnadu அமைச்சரவை கூட்டம் | ஒப்புதல் அளிக்கப்பட்ட 14 புதிய முதலீடுகள் குறித்த முழுவிவரம்!

01:38 PM Oct 08, 2024 IST | Web Editor
 tamilnadu அமைச்சரவை கூட்டம்   ஒப்புதல் அளிக்கப்பட்ட 14 புதிய முதலீடுகள் குறித்த முழுவிவரம்
Advertisement

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்ட 14 புதிய முதலீடுகள் குறித்த முழு விவரத்தை தற்போது பார்க்கலாம்....

Advertisement

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும். இந்த அமைச்சரவை கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உள்ளிட்ட அனைத்து துறை அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், 46,931 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ரூ.38.636.80 கோடியில் 14 புதிய முதலீடுகளுக்கு தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் ; “கூட்டணி கட்சிகளை மிரட்டுவதற்காக சிலர் மாநாடு நடத்துகின்றனர்” – பூவை ஜெகன்மூர்த்தி!

14 புதிய முதலீடுகள் குறித்து முழுவிவரம் பின்வருமாறு;

  • ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா மோட்டார்ஸ் லிமிடெட் ரூ.9000 கோடி முதலீட்டில், 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தொழிற்சாலை அமைக்கிறது.
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஃபாக்ஸ்கான் குழுமத்தின் துணை நிறுவனமான யூசான் டெக்னாலஜி (இந்தியா) பிரைவேட் லிமிடெட் ரூ.13180 கோடி முதலீட்டில், 14000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு
  • தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் PSG குழுமத்தின் துணை நிறுவனமான லீப் கீரின் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் ரூ.10375 கோடி முதலீட்டில் 3000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு.
  • அரியலூர் மாவட்டத்தில் தைவான் நாட்டைச் சேர்ந்த டீன் ஷூஸ் குழுமத்தின் துணை நிறுவனமான ஃப்ரீடிரெண்ட் இன்டஸ்ட்ரியல் இந்தியா பிரைவேட் லிமிடெட் ரூ.1000 கோடி முதலீட்டில் 15000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் கேன்ஸ் சர்க்யூட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ரூ.1395 கோடி முதலீட்டில், 1033 நபர்களுக்கு வேலைவாய்ப்பு
  • கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட் லிமிடெட் ரூ.612.60 கோடி முதலீட்டில், 1200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு
  • ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராண்ட் அட்லாண்டியா பனப்பாக்கம் SEZ டெவலப்பர்கள் ரூ.500 கோடி முதலீட்டில், 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் டேப்லெட்ஸ் இந்தியா லிமிடெட் ரூ.250 கோடி முதலீட்டில், 350 நபர்களுக்கு வேலைவாய்ப்பு
  • காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கோயம்பத்தூர் மாவட்டங்களில் விஸ்டியன் குழுக்கள் ரூ.368.92 கோடி முதலீட்டில், 658 நபர்களுக்கு வேலைவாய்ப்பு
  • சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லூகாஸ் டிவிஎஸ் குழு ரூ.510 கோடி முதலீட்டில், 415 நபர்களுக்கு வேலைவாய்ப்பு
  • செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மஹிந்திரா எலக்ட்ரிக் ஆட்டோமொபைல்ஸ் லிமிடெட் ரூ.210 கோடி முதலீட்டில், 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் நோக்கியா பிரைவேட் லிமிடெட் ரூ.296.63 கோடி முதலீட்டில், 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் ராக்வெல் குழுக்கள் ரூ.483.65 கோடி முதலீட்டில், 375 நபர்களுக்கு வேலைவாய்ப்பு
  • செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் சூப்பர் ஆட்டோ ஃபோர்ஜ் பிரைவேட் லிமிடெட் ரூ.517 கோடி முதலீட்டில், 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு
Tags :
Advertisement