Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அண்ணாமலையால் அறைக்குள் நடந்ததை சொல்லக்கூட முடியாது என தமிழிசை செளந்தரராஜன் கூறினாரா? - உண்மை என்ன?

08:48 AM Jun 14, 2024 IST | Web Editor
Advertisement

This news fact checked by Newschecker

Advertisement

முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை மத்திய அமைச்சர் அமித்ஷா கண்டித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.  இந்த  நிலையில் என்னையாவது வெளியில் கண்டித்தார் ஆனால் அண்ணாமலையால் அறைக்குள் நடந்ததை சொல்லக் கூட முடியாது என்று பாஜகவின் தமிழிசை செளந்தரராஜன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.  இது குறித்து நியூஸ் செக்கர் ஆய்வுக்கு உட்படுத்தியது. அவை குறித்து விரிவாக காணலாம்.

  தமிழிசை சௌந்தரராஜனை அமித்ஷா கண்டித்ததாக பரவிய வைரல் வீடியோ

ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழாவில்,  நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக,  விழா மேடைக்கு வந்த முன்னாள் ஆளுநர் தமிழிசை,  பாஜக தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்துக் கொண்டு கிளம்பினார். அப்போது அவரை அழைத்த அமித்ஷா, தமிழிசையிடம் ஏதோ சொல்ல அதற்கு தமிழிசையும் கனிவான முறையில் பதிலளித்தார்.

இரண்டு பேரும் பேசிக்கொள்வது சாதாரணமானதாக இல்லை என்பது,  அவர்கள் அருகில் அமர்ந்திருப்பவர்களின் முகங்களிலிருந்தும் நன்றாகவே தெரிகிறது.  இந்தக் காட்சிகள்
அனைத்தும் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியாகியிருந்தது.  இந்த ஒட்டுமொத்த நிகழ்வும் விடியோவில் பதிவாகி, ஊடகங்கள் வாயிலாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழிசை செளந்தரராஜன் பெயரில் பரவும் நியூஸ் கார்டு

அண்ணாமலையால் அறைக்குள் நடந்ததை சொல்லக் கூட முடியாது என்று பாஜகவின் தமிழிசை செளந்தரராஜன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ”அண்ணாமலைக்கு நடந்தது தெரியுமா? என்னையாவது வெளிப்படையாக கண்டித்தார். அண்ணாமலைக்கு அறைக்குள் நடந்ததை வெளியே சொல்லக்கூட முடியாது. சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி” என்று இந்த நியூஸ்கார்ட் பரவி வருகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத் தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத் தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தது.

உண்மை சரிபார்ப்பு

அண்ணாமலையால் அறைக்குள் நடந்ததை சொல்லக்கூட முடியாது என்று பாஜகவின் தமிழிசை செளந்தரராஜன் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் நியூஸ்கார்ட் புதியதலைமுறை பெயரில் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தை ஆராய்ந்த போது கடந்த ஏப்ரல் 13, 2024 அன்று அவர்கள் வெளியிட்டிருந்த நியூஸ்கார்டினை தற்போதைய வைரல் நியூஸ்கார்ட்டை ஒத்திருந்தது.

ஆனால், அதில் “ராகு காலம் பார்க்காமல் எந்த ஒரு திமுக வேட்பாளராவது வேட்பு மனு தாக்கல் செய்தது உண்டா? இந்துக்களின் ஓட்டுகளை வாங்கிய நீங்கள் ஏன் தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மறுக்கிறீர்கள்? தமிழர்களை பற்றி பேச முதல்வர் ஸ்டாலினுக்கு உரிமை இல்லை தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன்” என்கிற செய்தியே இடம்பெற்றிருந்தது.  குறிப்பிட்ட நியூஸ்கார்டினை எடிட் செய்தே தற்போதைய வைரல் நியூஸ்கார்டினை உருவாக்கியுள்ளனர் என்பது தெளிவாகியது.

மேலும், இதுகுறித்து புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளரை தொடர்பு கொண்டு பேசிய போது, ‘வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது’ என்று விளக்கமளித்தார். மேலும், குறிப்பிட்ட நியூஸ்கார்டினை போலி என்று குறியிட்டு நமக்கு அனுப்பி வைத்தார்.  தமிழிசை செளந்தரராஜன் விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவு

அண்ணாமலையால் அறைக்குள் நடந்ததை சொல்லக் கூட முடியாது என்று பாஜகவின் தமிழிசை செளந்தரராஜன் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

Note : This story was originally published by Newschecker and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
AnnamalaiFact CheckTamilisai Siundar rajan
Advertisement
Next Article