For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அஜ்மானில் கோலாகலமாக நடைபெற்ற "அன்னை மொழி அறிவோம் பள்ளி"யின் ஆண்டு விழா! 

11:03 AM Apr 29, 2024 IST | Web Editor
அஜ்மானில் கோலாகலமாக நடைபெற்ற  அன்னை மொழி அறிவோம் பள்ளி யின் ஆண்டு விழா  
Advertisement

துபாயில் செயல்பட்டு வரும் அன்னை மொழி அறிவோம் பள்ளிக் கூடத்தின் 6-ம் ஆண்டு விழா அஜ்மானில் நடைபெற்றது.

Advertisement

துபாயை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ‘அன்னை மொழி அறிவோம், “ எனும் நிறுவனமாகும்.  இதன் நிறுவனராக கங்காதரன் மற்றும் தலைவராக அனுராதா கங்காதரன் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.  இந்த நிறுவனத்தின் மூலம் இலவச தமிழ் பயிற்சி பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது.  தமிழ் மார்ட்,  அமீரகம் மற்றும் லிட்டில் ஸ்ப்ரவுட்ஸ் நர்சரி இணைந்து நடத்தும் அன்னை மொழி அறிவோம் இலவச தமிழ் பயிற்சி பள்ளியின் 6-வது ஆண்டு விழா அஜ்மானில் உள்ள ஹாபிடட் பள்ளிக்கூடத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தேசிய கல்வி அறக்கட்டளையின் நிறுவனரும்,  சமூக ஆர்வலருமான கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ.முகம்மது முகைதீன்,  அஜ்மான் புளூமிங்டன் பயிற்சி மையத்தின் தலைமை ஆசிரியை ஹுசைனா பேகம் நூர் ஷெரீப், எழுத்தாளரும்,  பேச்சாளருமான சசி எஸ் குமார்,  கவிஞர் சிவமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் அன்னை மொழி அறிவோம் பள்ளிக்கூடத்தின் நிறுவனர் அனுராதா கங்காதரன் வரவேற்புரையாற்றினார்.  அதன் பிறகு சிறப்பு விருந்தினர்கள் மற்றும் திறனாய்வு போட்டி நடுவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த விழாவில் நடந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளில் வரவேற்பு நடனம்,  பொய்யென பெய்யும் மழை கவிதை தொகுப்பு,  ஒயிலாட்டம், மயிலாட்டம்,  வில்லுப்பாட்டு,  பொம்மலாட்டம்,  கோலாட்டம், சிலப்பதிகாரம்-நாடகம், கரகம்,  புவியாட்டம்,  காவடியாட்டம்,  கிராமிய நடனம்,  மாடாட் டம் மற்றும் பறை ஆகியவை இடம்பெற்றன.

குறிப்பாக பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் நடந்த வில்லுப்பாட்டு நிகழ்ச்சி பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்தது..  அதேபோல் அன்னைமொழி அறிவோம் குழுவை வழி நடத்த உறுதுணையாக இருந்து வரும் தமிழ்மார்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கங்காதரனுக்கு தமிழ் மாமணி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.  மேலும் அன்னை மொழி அறிவோம் குழுவின் தன்னார்வலர்களுக்கு தமிழ் சுடர் விருதுகளும் வழங்கப்பட்டன. தன்னார்வளர்களுக்கு தமிழ்ச் சுடர் விருது வழங்கப்பட்டது.  மேலும் தன்னார்வலர் புனிதா மஞ்சுநாதனுக்கு அன்னை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Tags :
Advertisement