“தமிழை எக்காரணம் கொண்டும் கைவிடக் கூடாது” - மொரிசியஸ் நாட்டு முன்னாள் துணை குடியரசுத் தலைவர் பேட்டி!
மொரிசியஸ் நாட்டில் 2019 ஆம் ஆண்டு வரை துணை குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர் பரமசிவம் பிள்ளை வையாபுரி . இவர் இன்று(மார்ச்.15) திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசியதாவது, “கொடைக்கானலுக்கு இரண்டாவது முறையாக வந்துள்ளேன். கடந்த முறை வந்ததை ஒப்பிட்டுப் பார்க்கையில் கொடைக்கானலில் பிளாஸ்டிக் முழுமையாக ஒழிக்கப்பட்டு தூய்மையாக காட்சியளிக்கிறது. கொடைக்கானலில் உள்ள மரங்களும் இங்கு இருக்கக்கூடிய சீதோசன நிலையும் காப்பாற்றப்பட்டு வருவகிறது.
தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன். மொரிசியஸ் நாட்டில் தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளை எடுத்து
வருகிறார்கள். தமிழை மொரிசியத்தில் உள்ள தமிழர்களுக்கு பள்ளி பருவத்தில் இருந்து கல்லூரி பருவம் வரை மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழர் பண்டிகைகளை கொண்டாடப்பட்டு தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்றி வருகின்றனர்.
புறநானூறு உள்ளிட்டவைகள் தமிழை பெருமை அடைய செய்கிறது. தமிழ் மொழியை முழுமையாக பேச முடியாதது வருத்தம். தமிழை அனைவரும் காப்பாற்ற வேண்டும். தமிழ் மொழியை தமிழ் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற கடமை தமிழர்கள் அனைவருக்கும் இருக்க வேண்டும்.தமிழ் மொழியைபறைசாற்றி பேசும் தமிழர்கள் உலகில் ஒவ்வொரு மூலைகளிலும் இருக்கிறார்கள். தமிழர்கள் குறைந்த அளவில் இருந்தாலும் அவர்களுடைய நோக்கம் பெரிதாக இருக்க
வேண்டும். தமிழை எக்காரணம் கொண்டும் கைவிடக் கூடாது”
இவ்வாறு மொரிசியஸ் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் பரமசிவம் பிள்ளை வையாபுரி தெரிவித்துள்ளார்.