Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மகாராஷ்டிரா தேர்தல் - சியோன் கோலிவாடா தொகுதியில் தமிழ்செல்வன் முன்னிலை!

03:48 PM Nov 23, 2024 IST | Web Editor
Advertisement

மகாராஷ்டிரா சியோன் கோலிவாடா தொகுதியில் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழ்செல்வன் 50,000 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

Advertisement

288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஒரேகட்டமாக நவ.20ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும், பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் இணைந்து மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், சிவசேனா தேசியவாத காங்கிரஸ் இணைந்து மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் களமிறங்கின.

இந்த தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் சியோன் கோலிவாடா தொகுதியில் பாஜக வேட்பாளராக கேப்டன் தமிழ்செல்வனும், காங்கிரஸ் வேட்பாளராக கணேஷ் குமார் யாதவும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், 11வது சுற்று முடிவுபடி கேப்டன் தமிழ்செல்வன் 50,060 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

இதையும் படியுங்கள் : மாநாட்டிற்கு நிலம் கொடுத்த விவசாயிகளை கௌரவித்த தவெக தலைவர் விஜய்!

அவரை எதிர்த்து போட்டியிட்ட கணேஷ் குமார் யாதவ் 36,244 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 14,234 ஆகும். கேப்டன் தமிழ்செல்வன் ஏற்கனவே நடந்த தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
LeadingMaharashtraNews7Tamilnews7TamilUpdatesSion Koliwada constituencytamil naduTamil SelvanVotes
Advertisement
Next Article