For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”ஏப்ரல் மாதத்திற்குள் கடைகளுக்கு தமிழ் பெயர் பலகை” - அமைச்சர் சாமிநாதன்

05:06 PM Feb 07, 2024 IST | Web Editor
”ஏப்ரல் மாதத்திற்குள் கடைகளுக்கு தமிழ் பெயர் பலகை”   அமைச்சர் சாமிநாதன்
Advertisement

ஏப்ரல் மாத இறுதிக்குள் அனைத்து வணிக நிறுவனங்களும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர்களை தமிழில் இடம்பெற செய்வதற்கான ஆய்வு கூட்டம் கடந்த நவம்பர் 2ம் தேதி நடைபெற்றது.  இந்நிலையில், இரண்டாவது ஆய்வு கூட்டம் இன்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்,  தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.  இதில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்ட வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆய்வு கூட்டத்திற்கு பின், அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களிடம் பேசியதாவது;

தமிழ்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தமிழ் பெயர் பலகைகள்
அவசியம் இடம் பெற வேண்டும்.  தமிழ்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர்களை தமிழில் இடம்பெறுவதற்கான இரண்டாம் கூட்டம் இன்று நடைபெற்றது.  இதில் ஏப்ரல் மாத இறுதிக்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகளின் பெயர்களும் தமிழில் இடம் பெற வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளது.

அரசின் அரசாணை மற்றும் கடைகளின் உரிமம் ஆகியவை கூட தமிழ்மொழியில் இடம் பெற வேண்டும் என்கிற கோரிக்கையும் வணிகர் சங்கம் சார்பில் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.  தமிழில் பெயர்ப் பலகைகளை வைப்பது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஏப்ரல் மாத்திற்குள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகம், வணிக மற்றும் வியாபார நிறுவனங்களில் ஆங்கில பெயர்களில் உள்ள பலகைகளை தமிழில் மாற்ற
வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Advertisement