Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“தமிழக விளையாட்டு துறை இந்தியாவை மட்டுமில்லை, உலகத்தையே ஈர்த்துள்ளது!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

08:17 PM Oct 24, 2024 IST | Web Editor
Advertisement

தமிழக விளையாட்டு துறை இந்தியாவை மட்டுமில்லை, உலகத்தையே ஈர்த்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement

சென்னை நேரு விளையாட்டு அரங்க நிகழ்வில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்2024 வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

விளையாட்டு வீரர்களை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தமிழக விளையாட்டு துறையில் பல்வேறு திட்டங்களை அரசு நிறைவேற்றி உள்ளது. தமிழக விளையாட்டு துறை பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. தமிழக விளையாட்டு துறை இந்தியாவை மட்டுமில்ல, உலகத்தையே ஈர்த்துள்ளது. விளையாட்டுத்துறையை சிறப்பாக கவனித்து, இந்தியாவே உற்று நோக்கும் துறையாக மாற்றிக் காட்டியிருக்கிறார் தம்பி உதயநிதி. துறையும் வளர்ந்திருக்கு, துறையின் அமைச்சரும் வளர்ந்திருக்கிறார். விளையாட்டுத் துறை அமைச்சர் தம்பி உதயநிதி, துணை முதலமைச்சர் ஆனதில் விளையாட்டு வீரர்களான உங்கள் பங்கும் உண்டு.

எனது ஆட்சியில் விளையாட்டு துறையை பொழுதுபோக்காக பார்ப்பது இல்லை. விளையாட்டு மன வலிமையை, உடல் வலிமையை தரக்கூடியது. பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். விளையாட்டு வீரர்களின் ஊக்கத்தொகை ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Tags :
முதலமைச்சர் கோப்பை 2024CM Trophy Games 2024MK Stalin CMnews7 tamilUdhayanidhi stalin
Advertisement
Next Article