Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அமெரிக்காவின் 50% வரி உயர்வால் தமிழ்நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிப்பு - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

அமெரிக்காவின் 50% வரி உயர்வால் தமிழ்நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
11:33 AM Aug 28, 2025 IST | Web Editor
அமெரிக்காவின் 50% வரி உயர்வால் தமிழ்நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Advertisement

அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப்  இந்தியாவின் பொருட்களுக்கு அமெரிக்காவில் 25 சதவீத வரி விதித்தார். மேலும் ரஷ்யவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதியை சுட்டிகாட்டிஇந்தியப் பொருட்களின் மீதான வரியை 25 சதவீதம் உயர்த்தினார். இதன் மூலம் இந்தியா மீது விதிக்கப்பட்ட மொத்த வரியானது 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Advertisement

இந்த நிலையில் அமெரிக்க வரிகளால் பாதிக்கப்படும் தொழில் மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

”அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான வரிகள் 50% ஆக உயர்த்தப்பட்டிருப்பது தமிழ்நாட்டின் ஏற்றுமதியை கடுமையாகப் பாதித்துள்ளது, குறிப்பாக ஜவுளி மையமான திருப்பூரில் ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட ரூ.3,000 கோடி வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வேலைகள் ஆபத்தில் உள்ளன.

இதனால் நமது தொழில்கள் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்க உடனடி நிவாரணம் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று  மீண்டும் வலியுறுத்துகிறேன்”

என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஆஸ்ட் 18 ஆம் தேதி இதே கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

Tags :
centralgovermentlatestNewsMKStalintrumpterrifs
Advertisement
Next Article