“தமிழ்நாட்டின் எலெக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி திமுக ஆட்சியில் 7.4 பில்லியன் டாலராக உயர்வு!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
2021-இல் 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த தமிழ்நாட்டின் எலெக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, திமுக ஆட்சியில் 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X (ட்விட்டர்) தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சரின் அந்த X (ட்விட்டர்) தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
2021-இல் 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த தமிழ்நாட்டின் எலெக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, நமது திமுக அரசில் இப்போது 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருக்கிறது.
இதில் கூடுதல் தகவல் என்னவென்றால், இது மத்திய அரசின் புள்ளிவிவரம்! எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் செல்போன் ஏற்றுமதியில் முன்னணியில் நின்று, நாட்டின் ஏற்றுமதியில் 30% பங்கு வகிக்கும் நாம், நம் இலக்குகளை நோக்கி விரைந்து நடைபோடுவோம்!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.