Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் - 2,500 பேருக்கு தயாராகும் மதிய உணவு!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறும் நிலையில் கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு மதிய உணவு தயாராகி வருகிறது.
09:09 AM Mar 28, 2025 IST | Web Editor
Advertisement

நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நிலையில் முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி பதிவு செய்யப்பட்ட கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என விதிமுறை உள்ளது. அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், விஜய் தலைமையில் சென்னை திருவான்மியூரில் இன்று நடைபெறுகிறது.

Advertisement

இந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 2,500-க்கும் மேற்பட்டவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்கள். கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட இருக்கிறது.

மதிய உணவு பட்டியல் விவரம்:

1. மால் பூவா ஸ்வீட்
2. வெஜ் சூப்
3. ஊறுகாய்
4. இஞ்சி துவையல்
5. தயிர் பச்சடி
6. சப்பாத்தி பன்னீர் பட்டர் மசாலா
7. வெஜ் மட்டன் பிரியாணி
8. சாதம்
9. சைவ மீன் குழம்பு
10. சாம்பார்
11. மிளகு ரசம்
12. இறால் 65
13. அவியல்
14. ஆனியன் மணிலா
15. பக்கோடா
16. உருளை பட்டானி வறுவல்
17. தயிர் வடை
18. அப்பளம்
19. வெற்றிலை பாயாசம்
20. மோர்
21. ஐஸ்கிரீம்

Tags :
ChennaiGeneral MeetingLunchtamil nadutvkvijay
Advertisement
Next Article