For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாக்களித்தார்!

12:48 PM Apr 19, 2024 IST | Web Editor
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாக்களித்தார்
Advertisement

மக்களவை தேர்தலில் நடிகரும்,  தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது வாக்கினை பதிவு செய்தார். 

Advertisement

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024  ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பொதுமக்கள், அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் என பலரும் ஆர்வமுடன்  முன்கூட்டியே வந்து வாக்களித்தனர். இதற்கிடையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நடிகர் விஜய் தனது ஓட்டினை பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய்,  2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.  இதற்கிடையில் இந்த தேர்தலில் அவர் எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்காத நிலையில் யாருக்கு தனது வாக்கினை செலுத்தப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

கோட் படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்றிருந்த நடிகர் விஜய் இன்று காலை விமானம் மூலம் சென்னை திரும்பினார்.  முன்னதாக நடந்த 2 தேர்தல்களில் அவர் கார் மற்றும் சைக்கிளில் வந்து வாக்களித்து சர்ப்ரைஸ் கொடுத்தார்.  இம்முறை எதில் வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமானது.  அதன்படி இந்த முறை  காரில்  ரசிகர்கள் புடைசூழ புறப்பட்ட விஜய் நீலாங்கரை வாக்குச்சாவடியில்  தனது வாக்கினை செலுத்தினார்.

Tags :
Advertisement