Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழக வெற்றிக் கழக மாநாடு! தொண்டர்களை வரவேற்க பறக்கவிடப்பட்ட ராட்சத பலூன்கள்!

04:29 PM Oct 23, 2024 IST | Web Editor
Advertisement

தமிழக வெற்றிக் கழக மாநாட்டினை முன்னிட்டு விக்கிரவாண்டி அருகே பாப்பனப்பட்டு சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டு தொண்டர்களை வரவேற்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

Advertisement

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலை பகுதியில் வருகின்ற 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறவுள்ளது. இதற்காக 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கும் பணி 90 சதவிகிதம் நிறைவு பெற்று மீதமுள்ள பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மாநாடு நடைபெறுவதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விக்கிரவாண்டி அருகே பாப்பனப்பட்டு கிராமத்தில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் அருகே ராட்சத பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளன. பலூன்களில் விஜயின் உருவம் அச்சிடப்பட்டு பறக்கவிடப்பட்டுள்ளது மாநாட்டிற்கு வருபவர்களை வரவேற்கும் விதமாக இந்த பலூன் அமைந்துள்ளது. தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மாநாட்டினை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள், கட்டவுட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

Tags :
news7 tamilThalapathythalapathy vijaytvkTVK Vijayvijay
Advertisement
Next Article