Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“நாட்டிலேயே 13 துறைகளில் தமிழ்நாடு முதலிடம்!” - அமைச்சர் #UdhayanidhiStalin பெருமிதம்!

01:22 PM Sep 09, 2024 IST | Web Editor
Advertisement

நாட்டிலேயே 13 துறைகளில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

மதுரை மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற அரசு விழாவிற்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒத்தக்கடை பகுதியில் திருமோகூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை அவர் திறந்து வைத்தார்.

தொடர்ந்து, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பாக மாநில அளவில் 31,220 மகளிர் சுய உதவி குழுக்களை சார்ந்த 3,74,277 மகளிர்க்கு ரூ.2874.26 கோடி மதிப்பீட்டில் கடன் உதவிகள் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார். மதுரையில் வருவாய்த் துறையின் மூலம் 12,233 பயனாளிகளுக்கு ரூ.75 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 500 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.101 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து, விழா மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

“மதுரையில் திமுகவில் பொறுப்பிற்கு வருவதற்கு முன்பு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மாநாட்டை போல அமைச்சர் மூர்த்தி நடத்தினார். மூர்த்தி என்றாலே மாநாடு என்ற பெயர் வந்துள்ளது. 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 3 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று மக்கள் வாக்குறுதி கொடுத்தனர். மதுரை மக்களுக்கு ஏராளமான திட்டங்களை அமைச்சர் மூர்த்தி முதலமைச்சரிடம் கேட்டு செய்து வருகிறார்.

ஜல்லிக்கட்டுக்கு பேர் போன அலங்காநல்லூரில் ஸ்டேடியம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மதுரையை நோக்கி ஏராளமான திட்டங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. சுய உதவிக் குழு மற்றும் பட்டா வழங்குவதற்கு அரசு மக்களை தேடி சென்று கொண்டிருக்கிறது. வீட்டுமனை பட்டாக்கள், நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு தொடர்ந்து திமுக அரசு கொடுத்து வருகிறது. பட்டா வாங்கிய அனைவரும் நிம்மதியாக தூங்குவதை திமுக அரசு நிலைநாட்டி வருகிறது. மகளிர் இலவச பேருந்து மூலமாக பல பயணிகள் பயன்பெற்று வருகின்றனர்.

புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 15 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். நாட்டிலேயே உயிர்களை காப்பதில் தமிழகம் தான் முக்கிய இடத்தில் உள்ளது. அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் உயர்கல்வியில் முதல் இடத்தைப் பிடித்து வருகின்றனர். 13 துறைகளில் நாட்டிலேயே முதல் இடத்தில் தமிழ்நாடு இருந்து வருகிறது. திமுக அரசின் திட்டத்தை மக்கள் தான் மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்” இவ்வாறு அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் செய்தார். மேலும், மதுரை மட்டுமன்றி தென் மாவட்ட மக்களின் மருத்துவத் தேவைக்கு முக்கிய பங்காற்றி வரும் மதுரை அரசு இராசாசி பொது மருத்துவமனையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூர்த்தி ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.

Tags :
DMKMaduraiMoorthiNews7TamilTN GovtUdhayanidhi stalin
Advertisement
Next Article