Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டில் இன்று இயல்பைவிட 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்!

10:22 AM Apr 07, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் நேற்று 15 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் பதிவானது. அதிகபட்சமாக சேலத்தில் 106.7 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது.

Advertisement

தமிழ்நாட்டில் இந்த மாதம் முதல் கோடை காலம் தொடங்குகிறது. ஆனால், தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதனால் நீர் நிலைகளிலும் நீரின் அளவு குறைந்துள்ளது. வெயிலின் தாக்கத்தால் அருவிகளும் வறண்டே காணப்படுகின்றன. மேலும், பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்த காணப்படுகிறது. இதனால், மின்சாரத்தின் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் மின் நுகர்வு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் நேற்று (ஏப். 6) அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில்,

“தமிழ்நாட்டில் நேற்று (ஏப். 6) நிலவரப்படி, அதிகபட்சமாக சேலத்தில் 106.7 டிகிரி (ஃபாரன்ஹீட்) வெப்பம் பதிவானது. திருப்பத்தூர் - 106.52, பரமத்தி வேலூர் - 105.8, வேலூர் - 105.44, தருமபுரி, ஈரோடு தலா - 105.26, திருச்சி - 104.9, திருத்தணி - 104.18, நாமக்கல் - 104, மதுரை விமான நிலையம் - 103.64, சென்னை மீனம்பாக்கம், மதுரை நகரம் (தலா) - 103.28, கோவை - 102.2, தஞ்சாவூர் - 102.2, பாளையங்கோட்டை - 101.48 என 15 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் இன்று (ஏப். 7) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி வரை அதிகமாக இருக்கும். ஒரு சில பகுதிகளில் வெப்ப அலை வீசக்கூடும். நாளை (ஏப். 8) முதல் ஏப்.10 வரை 3 நாள்களில் வெப்ப அளவு 2 - 3 டிகிரி வரை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
HeatNews7Tamilnews7TamilUpdatessummerTamilNadu
Advertisement
Next Article