#Weatherupdate தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் அடுத்த ஏழு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.
மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
"தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2° - 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் எனவும், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
இதையும் படியுங்கள் : Uttarakhand – நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக மீட்பு!
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.