Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்தியாவில் காற்றாலை திறன் அதிகப்படுத்துவதில் தமிழ்நாடு 3வது இடம்!

08:32 PM Jun 15, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியாவிலயே காற்றாலை மின் உற்பத்தி திறனை அதிகப்படுத்துவதில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது.

Advertisement

ஒரு மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை எவ்வளவு முக்கியமோ அதுபோன்று காற்று என்பது மிகமிக முக்கியம். ஏனெனில் காற்று இல்லாமல் நம்மால் உயிர்வாழ முடியாது. உலக காற்று தினம் ஆண்டுதோறும் ஜூன் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. மனிதனுக்கு மட்டுமின்றி அனைத்து தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கும் காற்று மிகவும் அவசியமானதாகும்.

அப்படிப்பட்ட காற்றின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 15-ம் தேதி உலக காற்று தினம் கொண்டாடப்படுகிறது. முதன்முதலில் 2007-ஆம் ஆண்டு ஐரோப்பாவில் மட்டுமே கொண்டாடப்பட்ட இந்த தினம், தற்போது ஓர் உலகளாவிய நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது.

அந்த வகையில் இன்று உலக காற்று தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்று (ஜூன் 15) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், காற்றாலை திறன் அதிகப்படுத்துவதில் நாட்டிலேயே 3 வது இடத்தை பிடித்துள்ளது. இன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் இதற்கான விருதினை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஸ் லகானி இ.ஆ.ப பெற்றுக்கொண்டார்.

Tags :
TamilNaduTANGEDCOWind Power CapacityWorld Wind Day
Advertisement
Next Article