தமிழக ரயில் நிலையங்களில் தமிழ்/ஆங்கிலம் தெரிந்த ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் -மத்திய அமைச்சருக்கு கனிமொழி எம்.பி கடிதம்...
தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பணிபுரியும் தமிழ் அல்லது ஆங்கிலம் தெரிந்த ரயில்வே ஊழியர்களை பணியமர்த்த அவசர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-க்கு, கனிமொழி எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில்:
சமீபத்தில் எனது தொகுதியில் உள்ள கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இந்தி தெரியாததால் மக்களுக்கு சரியான சேவை வழங்கப்படாத சம்பவம் அரங்கேறியது. கோவில்பட்டி ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு எழுத்தருக்கு தமிழோ ஆங்கிலமோ தெரியாது.
தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பயணிகள் பூர்த்தி செய்த முன்பதிவு படிவங்களை முன்பதிவு எழுத்தர் புரிந்து கொள்ள முடியாததால், தட்கல் முறையில் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதிப்பட்டனர். இது குறித்து பயணிகள் ரயில் நிலைய மாஸ்டரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் தங்கள் கடமைகளைத் திறம்பட நிறைவேற்றத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பணிபுரியும் அறிவு உள்ள முன்பதிவு எழுத்தர்களை பணியமர்த்துவது பொருத்தமானது. எனவே தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் தமிழ் அல்லது ஆங்கிலம் தெரிந்தவர்களை உடனடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் க்கு எழுதிய கடிதத்தில் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
அண்மையில் கோவில்பட்டி ரயில்நிலையத்தில், இந்தி தெரியாது என்ற காரணத்தால் பயணிகளுக்கு உரியச் சேவை வழங்கப்படாதது குறித்தும், தமிழ்/ஆங்கிலம் தெரிந்த பணியாளரை நியமிக்க வேண்டும் என ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.
I have written to the Minister… pic.twitter.com/NHVi8KyCri
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) February 17, 2024