ஹிந்தியில் தமிழ்நாடு, புதுச்சேரி வானிலை அறிக்கை - சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்!
தமிழ்நாட்டுக்கான வானிலை மைய அறிக்கையை இந்தியிலும் வழங்க தொடங்கியுள்ளது மத்திய அரசு என சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
12:47 PM Mar 27, 2025 IST | Web Editor
Advertisement
தமிழ்நாடு வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மூன்றாவது மொழியாக இந்தியில் அறிக்கை வெளியீடப்பட்டுள்ளது. இதற்கு எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
Advertisement
“தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை வழங்கும் சென்னை மண்டல வானிலை மையம் தனது அன்றாட வானிலை அறிக்கையை இந்தியிலும் வழங்கத் தொட்ங்கியுள்ளது.
தமிழ்நாட்டின் பேரிடர் பாதிப்பு நிவாரணத்துக்கு நிதியுதவி அளிக்காத மத்திய அரசு பேரிடர் முன்னறிவிப்பில் இந்தியைத் திணிக்கிறது. பா.ஜ.க.விற்கு தமிழ்நாட்டு மக்களின் நலன் என்றுமே முக்கியமானதாக இருந்ததில்லை என்பதற்கு இந்நடவடிக்கை மற்றுமொரு உதாரணமாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.